வேட்டை:
பையா" படத்தை தொடர்ந்து டைரக்டர் லிங்குசாமி அடுத்து இயக்கும் படம் "வேட்டை". ஆர்யா, மாதவன், அமலா பால், சமீரா ரெட்டி ஆகியோர் நடிப்பில் ஆக்ஷன் கலந்த அதிரடி படமாக உருவாகி வரும் இப்படத்தை ஆரம்பத்தில் க்ளவுடு நைன் மூவிஸ் சார்பில் துரை தயாநிதி தயாரிப்பதாக இருந்தது. பின்னர் சிலபல பிரச்சனைகளால் அவர் விலக தயாரிப்பு பொறுப்பை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் ஏற்றது. லிங்குசாமியுடன் சுபாஷ் சந்திரபோஸ் சேர்ந்து தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
சமூக சேவையில் ஆர்வம் காட்டும் கார்த்தி!
ம் விதமாக கார்த்தி இந்த அமைப்போடு தன்னை இணைத்து கொண்டுள்ளார்.
பருத்திவீரன் படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை என்று ஹிட் படங்களாக கொடுத்து முன்னணி நடிகராக மாறி, மிக குறுகிய காலத்திற்குள்ளேயே தமிழக ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்த கார்த்தி, இப்போது எல்.எஸ்.டி.எஸ்.எஸ்., அமைப்போடு சேர்ந்து, சமூக சேவை பணிகளில் தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ளார். குறிப்பிட்ட நோயாளிகள் குழுவுடன் இணைந்து அவர்களுக்கு முறையான நோய் காரணி அறிதல் மற்றும் சிகிச்சை வழங்குதல் ஆகியவற்றுக்கு உதவ முன் வந்துள்ளார். புதிய மரபியல் நோயான திசு உள் செரிமானச் சேமிப்புக் கோளாறினால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கான பிரத்யேக உதவி செய்யும் இந்த அமைப்பு சுருக்கமாக எல்.எஸ்.டி.எஸ்.எஸ்., என்று அழைக்கப்படும்.
இதுகுறித்து கார்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது, குழந்தைகள் தங்கள் சின்னஞ் சிறு வயதிலேயே இதுபோன்ற கொடுமையான நோயினால் பாதிக்கப்படுகின்றனர். இதை கண்டு என் நெஞ்சம் படபடத்தது. இவர்களுக்கு உதவும் நோக்கோடு இந்த அமைப்பில் என்னை இணைத்து கொண்டேன். இந்த நோய் குறித்த முறையான விழிப்புணர்வு, பரிசோதனை வசதிகள், சிகிச்சைக்கான நிதி உதவி ஆகியவை மிகவும் அவசியம். என்னுடைய ஆரோக்கியமான ஈடுபாடு மூலம், இந்த குழந்தைகளுக்கு இயன்ற உதவிகளை செய்ய முன்வருவேன். இதன்மூலம் இந்த குழந்தைகளின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டால் மகிழ்ச்சி அடைவேன் என்றார்.
இதுகுறித்து இந்த அமைப்பின் தலைவரும், பாம்ப் எனப்படும் ஒரு வகை எல்.எஸ்.டி., நோயினால் பாதிக்கப்பட்டுள்ள தனது 12வயது குழந்தையின் தந்தையான பிரசன்ன குமார் ஷிரோல் பேசுகையில், நோயாளிகளையும், அவர்களது குடும்பங்களையும் இணைத்து தேவையான ஆதரவை பெறுவதற்காக கடந்த ஆண்டு இந்த அமைப்பினை தொடங்கினோம். இந்த அமைப்பில் கார்த்தியும் சேர்ந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வாழ்வு மேம்பட வேண்டும் என்ற எங்களின் நோக்கம் வெற்றி பெற இந்த இணைந்த செயல்பாடு ஒரு குறிப்பிடத்தக்க முனைவாகும் என்றார்.
எல்.எஸ்.டி., என்று அழைக்கப்படும் இந்தநோய் உடலியக்கத்தை பாதிப்பதுடன், உயிருக்கும் ஆபத்தையும் விளைவிக்க கூடியது. உடலில் உள்ள உயிர்வினை ஊக்கியின் செயலற்ற தன்மை காரணமாக இதுபோன்று 45விதமான எல்.எஸ்.டி.,க்கள் தோன்றுகின்றன.
No comments:
Post a Comment